Corona Virus

மேலும் 125 பேர் உயிரிழப்பு.. 5,950 பேருக்கு பாதிப்பு: 5 மாதமாகியும் தொடரும் கொரோனா தொற்று.. திணரும் அரசு

தமிழகத்தில் இன்று மேலும் 5,950 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று மேலும் 5,950 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்தை கடந்து தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

அதன்படி இன்று 1,196 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூரில் 488, செங்கல்பட்டில் 436, கோவையில் 395, காஞ்சிபுரத்தில் 307 என பிற மாவட்டங்களில் மட்டுமே இன்று 4,754 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இது வரையில் 35 லட்சத்து 81 ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 68 ஆயிரத்து 444 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் 125 பேர் உயிரிழப்பு.. 5,950 பேருக்கு பாதிப்பு: 5 மாதமாகியும் தொடரும் கொரோனா தொற்று.. திணரும் அரசு

மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை போன்று அதன் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினந்தோறும் புது புது உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி இன்று மேலும் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் மாறுபட்டு வருகிறது. இன்று 6,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 2.78 லட்சத்து 270 பேர் மீண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 54ஆயிரத்து 19 பேருக்க்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories