தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகவும் தினந்தோறும் புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் எவ்வித தங்குதடைகளுமின்றி கிடைக்க செய்தவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சுதந்திர தின விழாவில் நல் ஆளுமை விருது கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நல் ஆளுமை விருதுக்கான மதிப்பே குறைந்துவிட்டது என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். விஜயபாஸ்கருக்கு நல் ஆளுமை விருது வழங்கியிருப்பது வேடிக்கையான, வேதனையான நிகழ்வு எனவும் சாடியுள்ளனர்.