Corona Virus

புதிய உச்சமாக ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி... இறப்பு விகிதம் குறைவு என பசப்பும் அ.தி.மு.க அரசு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தமிழகத்தில் ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 69 ஆயிரத்து 598 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.32 லட்சத்து 105 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரையில் சென்னையில் 1,000க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக 1,000ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதன்படி இன்று 1,179 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 புதிய உச்சமாக ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி... இறப்பு விகிதம் குறைவு என பசப்பும் அ.தி.மு.க அரசு!

பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் 422, செங்கல்பட்டில் 376, கடலூரில் 340, கோவையில் 290, ராணிப்பேட்டையில் 260, தேனியில் 213, சேலத்தில் 200, காஞ்சியில் 184, குமரியில் 182, புதுக்கோட்டையில் 170, நெல்லையில் 169, விருதுநகரில் 167, வேலூரில் 153 பேருக்கு என தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை போன்று அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டு வருகிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரே நாளில் மட்டும் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

மொத்தமாக இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 26, புதுக்கோட்டை, தஞ்சையில் தலா 7, கோவை, மதுரை, விருதுநகரில் தலா 6, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நெல்லையில் தலா 5 என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

 புதிய உச்சமாக ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி... இறப்பு விகிதம் குறைவு என பசப்பும் அ.தி.மு.க அரசு!

மேலும், பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் வேளையில் தினந்தோறும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 5,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக 2.72 லட்சத்து 251 பேர் குணமாகியுள்ளனர்.

இதனையடுத்து தற்போது 54 ஆயிரத்து 213 பேருக்கு வீட்டிலும் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

banner

Related Stories

Related Stories