Corona Virus

“கொரோனா தடுப்பூசி இலவசமாகவே கிடைக்கும்... மக்கள் பயப்பட வேண்டாம்” - WHO ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன்

கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பான ஆலோசனைகளை வழங்கிய உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சாமிநாதனுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்து எப்போது வரும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 8 மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் புரட்டிப்போட்டுள்ளது இந்த கொரோனா வைரஸ். கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் லட்சக் கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். இதனால் மக்கள் இயல்பு வாழ்வு ஊரடங்குடனும் கொரோனாவுடனே கழிந்து வருகிறது.

“கொரோனா தடுப்பூசி இலவசமாகவே கிடைக்கும்... மக்கள் பயப்பட வேண்டாம்” - WHO ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன்

ஆகவே இவற்றையெல்லாம் களைந்து பழைய வாழ்க்கை முறையை கொண்டு வருவதற்காக பல்வேறு நாட்டு அரசுகள் கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கியமான அங்கமாக உள்ளதுதான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு. இதுதொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி என பல்வேறு நாடுகள் சீரிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

உலக நாடுகளில் அதிகளவில் கொரோனா பாதிப்புகளை கொண்டதில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான மருத்துவர் சவுமியா சாமிநாதன், “கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலக அளவில் 200 நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அதில் இந்தியாவில் மட்டுமே 8 நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

“கொரோனா தடுப்பூசி இலவசமாகவே கிடைக்கும்... மக்கள் பயப்பட வேண்டாம்” - WHO ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன்

இது மட்டுமல்லாமல், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் வெகுஜன பயன்பாட்டுக்கு இலவசமாகவே கிடைக்கும். அதற்கான நிதி திரட்டல் பணிகளும் கூடவே நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிட் 19 தடுப்பு பணிக்காக சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய சவுமியா சாமிநாதனுக்கு தமிழக அரசு சார்பாக முதலமைச்சரின் சிறப்பு விருது இன்று வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories