Corona Virus

மீண்டும் சென்னையில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - இன்று மட்டும் தமிழகத்தில் 117 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு 3,26,245 ஆக அதிகரிப்பு!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 70,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 35 லட்சத்து 69 ஆயிரத்து 453 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கு குறைவாக இருந்துவந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று திருவள்ளூரில் 495 பேருக்கும், செங்கல்பட்டில் 437 பேருக்கும், கோவையில் 385 பேருக்கும், தேனியில் 367 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சென்னையில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - இன்று மட்டும் தமிழகத்தில் 117 பேர் பலி!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 15 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 53,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 117 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories