Corona Virus

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 52 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி - அதிர்ச்சி சம்பவம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த 70 வயது முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த 70 வயது முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பலி எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 118 பேர் பலியாகினர். அவர்களில் 47 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 71 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள சென்னையைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் 52 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மரணமடைந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 52 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி - அதிர்ச்சி சம்பவம்!

பலியான முதியவர் காய்ச்சல், இருமல், மூச்சுச்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கட்ந்த ஜூன் 16ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 52 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ம் தேதி உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று சென்னையைச் சேர்ந்த 50 வயதைக் கடந்த இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories