Corona Virus

இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலி... தமிழகத்தில் 5,835 பேருக்கு புதிதாக தொற்று! #Corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 67,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 34 லட்சத்து 99 ஆயிரத்து 300 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 453 பேருக்கும், திருவள்ளூரில் 390 பேருக்கும், கோவையில் 289 பேருக்கும், தேனியில் 286 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 53,499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 38 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories