Corona Virus

கொரோனாவுக்கு மேலும் 119 பேர் பலி... தொடர்ந்து உயரும் உயிரிழப்பு... தடுப்பு நடவடிக்கையை கோட்டைவிட்ட அரசு!?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2.56 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 69 ஆயிரத்து 697 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தமிழகத்திலேயே இருந்த 5,844 பேருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 993 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 4,878 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.14 லட்சத்து 520 பேர் இதுவரை வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு மேலும் 119 பேர் பலி... தொடர்ந்து உயரும் உயிரிழப்பு... தடுப்பு நடவடிக்கையை கோட்டைவிட்ட அரசு!?
கொரோனாவுக்கு மேலும் 119 பேர் பலி... தொடர்ந்து உயரும் உயிரிழப்பு... தடுப்பு நடவடிக்கையை கோட்டைவிட்ட அரசு!?

கடந்த 24 மணிநேரத்தில் 119 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5,633 ஆக உள்ளது. மொத்தமாக 2.56 லட்சத்து 313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே தற்போது 52 ஆயிரத்து 929 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories