Corona Virus

கொரோனாவால் பலியாவோரின் குடும்பத்துக்கு நிதியுதவி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு: குற்றங்கள் பெருகும் என மனு!

முன்கள பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது போல் சாமானிய மக்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவுக்கு பலியாவோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்கள் பணியில் மக்கள் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பொதுநல மனுவில்,  தமிழகத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 350 பேர் இறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனாவால் பலியாவோரின் குடும்பத்துக்கு நிதியுதவி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு: குற்றங்கள் பெருகும் என மனு!

கொரோனாவால் இறந்த பலரது குடும்பம் வருமானமின்றி வாழ்வாதாரத்துக்காக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாகவும், போதுமான நிதியுதவி வழங்காவிட்டால் சமூகத்தில் சட்டவிரோத குற்றச்செயல்கள் பெருக அரசே காரணமாகிவிடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளதை போல, கொரோனாவால் உயிரிழக்கும் சாதாரண பொதுமக்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories