Corona Virus

எதனிடமிருந்து தடுப்பூசியை பெறுவது? குழு அமைத்தது மத்திய அரசு - சுகாதார செயலர் தகவல்! #CoronaCrisis

தடுப்பூசி பெறப்படுவது குறித்து மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றினை அமைத்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவுக்கு எந்த தடுப்பூசியை பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மக்களுக்கு செலுத்துவதற்காக எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்குவது, கொள்முதல் செய்வது என முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு, சீரம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகளை நடத்தி வருகிறது.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை பெறுவது குறித்தும் இந்த நிபுணர் குழு ஆராய்ந்து முடிவு மேற்கொள்ளும் என்றும் ராஜேஷ் பூஷண் கூறினார்.

banner

Related Stories

Related Stories