Corona Virus

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தையும் கடந்தது... #CoronaUpates

தமிழகத்தில் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை தினந்தோறு 100ஐ கடந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 114 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 65 ஆயிரத்து 141 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,914 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் தமிழகத்திலேயே இருந்தவர்கள் 5,879 பேருக்கும், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 35 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் 976 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 4 நாட்களாக சென்னையில் 1000க்கும் குறைவான எண்ணிக்கைகள் பதிவாகி வருவது சற்று ஆறுதலானதாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தையும் கடந்தது... #CoronaUpates

இருப்பினும் சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 483 பேருக்கும், திருவள்ளூரில் 399 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக, தேனியில் 357, காஞ்சியில் 310, கோவையில் 292, கடலூரில் 282, கன்னியாகுமரி 204 என கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

ஆகவே தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 2,815 ஆக அதிகரித்துள்ளது. இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 6,037 ஆக உள்ளது. ஆகவே மொத்தமாக இதுவரை 2.44 லட்சத்து 675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தையும் கடந்தது... #CoronaUpates

இருப்பினும் அண்மைக்காலங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 114 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தற்போது 53 ஆயிரத்து 99 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்தவர்கள் 5,792 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories