Corona Virus

ஆறே நாட்களில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு : இந்தியாவில் 21 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று- அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஆகஸ்ட் 3 ஆம் தேதியிலிருந்து இன்று வரை மட்டுமே புதிதாக 3 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதன் தீவிர தன்மையைக் கடந்த ஆறு நாட்களில் உணர்த்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது 940 அரசு மையங்கள் மற்றும் 462 தனியார் மையங்கள் என 1,402 பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காகச் செயல்படுகின்றன, இவற்றில் 713 மையங்கள் ரேபிட் சோதனை, பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்து வருகின்றன.

ஆறே நாட்களில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு : இந்தியாவில் 21 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று- அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்தது. அடுத்த இரண்டு நாட்களில் 19 லட்சமாகப் பாதிப்பு அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சமானது. இதையடுத்து மொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொட்டது அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 8) ஒரே நாளில் 64,399 பாதிப்புகள் உறுதியான நிலையில் கடந்த 6 நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்து தற்போது இந்தியா 21 லட்சம் பாதிப்பு என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

ஆறே நாட்களில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு : இந்தியாவில் 21 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று- அதிர்ச்சி தகவல்!

இந்தநிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 6,000 பாதிப்புகளுடன் 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கு காலத்தில் பல தளர்வுகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories