Corona Virus

தமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 119 பேர் பலி! #CoronaUpdate

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6,020 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,38,638 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 85 பேர், தனியார் மருத்துவமனைகளில் 34 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories