Corona Virus

“இப்போதாவது கொரோனாவால் பலியான மருத்துவர்கள் எத்தனை பேர் என்பதை அறிவிப்பீர்களா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

கொரோனாவால் உயிரிழந்த தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிடாமல் மறைத்து வருகிறது.

மருத்துவர்களின் மரணங்களை அ.தி.மு.க அரசு மறைப்பது தொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் 43 மருத்துவர்கள் பலியானதாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“இப்போதாவது கொரோனாவால் பலியான மருத்துவர்கள் எத்தனை பேர் என்பதை அறிவிப்பீர்களா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் இறப்பு குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதற்கு எதிரான வகையில் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

“கொரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்தார்கள் என்ற செய்தியை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார்.

இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் இன்று தெரிவித்திருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories