தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 55 ஆயிரத்து 619 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேனியில் 452 பேருக்கும், செங்கல்பட்டில் 425 பேருக்கும், திருவள்ளூரில் 391 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 284 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். 37 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 81 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது.