Corona Virus

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேர் பலி... 5,684 பேருக்கு கொரோனா தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 30 லட்சத்து 20 ஆயிரத்து 714 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,091 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,06,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும் இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேர் பலி...  5,684 பேருக்கு கொரோனா தொற்று! #CoronaUpdates

இன்று மட்டும் கொரோனா பாதித்த 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,21,087 ஆக உள்ளது. தற்போது 53,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 110 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 88 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories