Corona Virus

இன்று ஒரே நாளில் 112 பேர் பலி : தமிழகத்தில் கொரோனாவால் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 125 ஆய்வகங்கள் மூலமாக, இன்று 61,166 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 112 பேர் பலி : தமிழகத்தில் கொரோனாவால் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 2,14,815 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 54184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 112 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories