Corona Virus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 52,509 பேர் பாதிப்பு.. 857 பேர் பலி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 52,509 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,509 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 857 ஆக உயர்ந்து 39,795 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது.

மிக மோசமாகப் பரவக்கூடிய இந்த கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தேசிய அளவில் 12,82,215 மக்கள் மீண்டுள்ளனர். இதன் மூலம் தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து மீள்பவர்களின் சதவீதம் 67.19% ஆக உள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் இது வரையிலான மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உள்ளது. நேற்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,035 பேரும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 28 பேரும் அடங்குவார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 52,509 பேர் பாதிப்பு.. 857 பேர் பலி!

சென்னையில் மட்டும் செவ்வாய்க் கிழமையான நேற்று 1,023 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் நேற்று மேலும் 108 பேர் பலியாகியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 4349 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 6501 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,08784 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்கள் வீதம் 77.80% சதவீதமாக உள்ளது.

banner

Related Stories

Related Stories