Corona Virus

கொரோனா தடுப்பு மருந்துகள் : மனிதர்கள் மீதான முதற்கட்ட சோதனை வெற்றி - ஐ.சி.எம்.ஆர் தகவல்!

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதான முதல்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து, இரண்டாம் கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டதாக ஐ.சி.எம்.ஆர் தகவல்.

Sakchai Lalit
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதான முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து, இரண்டாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை தொடங்கிவிட்டதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களைச் சந்திக்கையில், “உலகளவில் 141 நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இதில் 26 நிறுவனங்கள் தடுப்பு மருந்து சோதனையில் முக்கியக் கட்டத்தில் இருக்கின்றன.

இந்தியாவில் 3 நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இதில் இரு இந்திய நிறுவனங்கள் முதல் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்துள்ளன.

கொரோனா தடுப்பு மருந்துகள் : மனிதர்கள் மீதான முதற்கட்ட சோதனை வெற்றி - ஐ.சி.எம்.ஆர் தகவல்!

பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடெஸ் கெடிலா ஆகிய மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனையை 11 இடங்களில் முடித்துவிட்டன. இரண்டாவது கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டன.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியியில் இறங்கியுள்ள, இந்தியாவின் செரம் நிறுவனம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனையை மனிதர்கள் மீது நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்தப் பரிசோதனை ஒரு வாரத்தில் நடக்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories