Corona Virus

கொரோனா ரிசல்ட் வர 7 நாள் ஆவது ஏன்? நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் நடக்குமா? -மதுரை ஐகோர்ட் விளாசல்

கொரோனா மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உரிய விதிமுறைகள் இருக்கும்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கக் கூடாது

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்," மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கொரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அதனடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது இந்த வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் ஒரு மனுதார்ராக இனைந்துள்ளார்.

கொரோனா ரிசல்ட் வர 7 நாள் ஆவது ஏன்?  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் நடக்குமா? -மதுரை ஐகோர்ட் விளாசல்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, விசாரணையின் போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மதுரையில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் 1,400 பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதிய அளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கொரோனா பரிசோதனை செய்து முடிவு வருவதற்கு ஏழு நாட்கள் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஏன் இந்த கால தாமதம் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளது அதில் எத்தனை நோயாளிகள் உள்ளனர் எத்தனை படுக்கை காலியாக உள்ளது என்று பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்றும் பொதுமக்கள் , நோயாளிகள் பயன்படுத்தும்

கொரோனா ரிசல்ட் வர 7 நாள் ஆவது ஏன்?  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் நடக்குமா? -மதுரை ஐகோர்ட் விளாசல்

முக கவசங்கள் மற்றும் பாதுகாப்பு PPe உபகரணங்களை கழிவுகளை எவ்வாறு அகற்றப் படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டனர்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மருத்துவ கழிவுகளை அகற்றுவது சம்பந்தமாக உரிய விதிமுறைகள் இருக்கின்றபோது நீதிமன்றம் உத்தரவுகளை புதிதாக பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories