Corona Virus

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் - போலிஸார் தீவிர கண்காணிப்பு: தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளதால் இன்று ஒரு நாள் நள்ளிரவு வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.51 லட்சத்து 738 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர், மதுரை, செங்கல்பட்டிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் மூழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் - போலிஸார் தீவிர கண்காணிப்பு: தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு தொடங்கியது!
R Senthil Kumar

இந்த ஊரடங்கில் கடைகள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி, போக்குவரத்து இயங்க அனுமதி என பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர் நிகழ்வாக இன்று முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இரு வழிப் பாதைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துவ தேவைக்காக வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் சாலைகளில் சுற்றித் திரிபவர்களும், வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசுபவர்களும், முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களையும் போலிஸார் கைது செய்யப்போவதாக எச்சரித்துள்ளனர். மேலும் முழு ஊரடங்கும் போதும் மக்கள் அச்சப்படாமல் சாலைகளில் சுற்றித் திரிவதை போலிஸார் கட்டுப்படுத்துவதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள இன்று ஒரு நாள் ஊரடங்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வீட்டில் முடங்கி இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

banner

Related Stories

Related Stories