Corona Virus

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை குழுவில் உள்ள பூசாரிக்கு கொரோனா தொற்று - 16 போலிஸாரும் பாதிப்பு!

ராம ஜன்மபூமி வளாக சோதனையில் இருந்த 16 போலிஸாருக்கும், ஒரு பூசாரிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அங்கு பணிபுரியும் பூசாரிகளுள் ஒருவரான பிரதீப் தாஸ் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள 16 போலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே ராம் ஜன்ம பூமி வளாகம் முழுவதையும் தினசரி சுத்திகரிக்க டிரஸ்ட் முடிவு செய்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை குழுவில் உள்ள பூசாரிக்கு  கொரோனா தொற்று - 16 போலிஸாரும் பாதிப்பு!

சுமார் 200 பேர் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார்.

மூத்த பா.ஜ.க தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி இந்த விழாவிற்கு அழைக்கப்படுவார் என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை குழுவில் உள்ள பூசாரிக்கு  கொரோனா தொற்று - 16 போலிஸாரும் பாதிப்பு!

அயோத்தியில், ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடமான ராம் ஜன்ம பூமி தளத்தில் மூன்று நாள் வேத சடங்குகளுக்கு விரிவான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. சடங்குகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி ‘பூமி பூஜை’யுடன் முடிவடையும்.

இப்படி மிகப்பெரிய விழாவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் அந்த இடத்தில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories