Corona Virus

இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி காணும் மோடி அரசு!

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,83,792 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், முதன் முறையாக கடந்த 24 மணி நேரதில் மட்டும் புதிய கொரோனா தொற்று பதிவு 50 ஆயிரத்தை தொட்டது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,, கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா புதிய பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஐந்து மாதங்களை பொருத்தவரை ஒரே நாளில் அதிகமான தொற்று விகிதமாகும். இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,83,792 ஆக அதிகரித்துள்ளது.

 இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி காணும் மோடி அரசு!

மத்திய அரசு அறிக்கையில் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 775 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை மொத்தம் 34,968 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த்துள்ளனர்.

 இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி காணும் மோடி அரசு!

இதுவரை 10,20,582 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்த மீட்பு சதவிகிதம் 63.43 எனக் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ள மொத்த எண்னிக்கை 1,81,90,382 ஆகும். இத்தோடு நேற்று (புதன்) நிலவரப்படி ஒரே நாளில் 4,46,642 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் மத்திய அரசு நேற்று சில ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories