Corona Virus

இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் பலி! #Covid19

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 53 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 25 லட்சத்து 97 ஆயிரத்து 862 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 98,767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர்  பலி! #Covid19

மேலும், செங்கல்பட்டில் 354 பேருக்கும், திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும், திருநெல்வேலியில் 277 பேருக்கும், ராணிப்பேட்டையில் 272 பேருக்கும், தேனியில் 261 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக உள்ளது. தற்போது 57,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories