Corona Virus

#Unlock3 : இரவு நேர ஊரடங்கு இனி கிடையாது : புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

புது தளர்வுகளுடன் unlock 3. ஆகஸ்ட் 05 முதல் ஜிம்களை திறக்கவும் அனுமதி. சுதந்திர தின நிகழ்வுகள் சரியான சுகாதார நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் தளர்வுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து கொண்டே வருகிறது.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் இன்று புதுத் தளர்வுகளுடன் UNLOCK 3-யை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

#Unlock3 : இரவு நேர ஊரடங்கு இனி கிடையாது : புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

அதில் உள்ள முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால், இரவு நேரத்தில் ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள் (containment zone) தவிர்த்து வெளியே கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. இதோடு வரும் ஆகஸ்ட் 5 முதல் ஜிம்கள் மற்றும் யோகா நிறுவனங்கள் திறக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், சுதந்திர தின நிகழ்வுகள் சரியான சுகாதார நெறிமுறைகளுடனும்,சமுக இடைவெளியுடனும் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மூன்றாம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில் சேவை, அதிகமாகக் கூட்டம் கூடும் நிகழ்வுகள் போன்றவை தொடர்ந்து தடையில் உள்ளன.

#Unlock3 : இரவு நேர ஊரடங்கு இனி கிடையாது : புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், அரங்கங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்படும் எனவும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 31 வரை மூடப்படும் எனவும் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தளர்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#Unlock3 : இரவு நேர ஊரடங்கு இனி கிடையாது : புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவின் தற்போதைய நிலவரப்படி 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கிவரும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories