Corona Virus

கொரோனா தாக்கம் தீவிரம் : மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு - மம்தா பானர்ஜி அதிரடி!

இந்த லாக்டவுனில் வாரம் இரண்டு நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வாரம் இரண்டு நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அம்மாநில அரசு ஜூலை மாதம் இறுதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மம்தா தெரிவித்துள்ளார். பக்ரித் பண்டிகை அன்று மட்டும் ஊரடங்கில் தளர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஊரடங்கு ஆகஸ்ட் 2-ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் தீவிரம் : மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு - மம்தா பானர்ஜி அதிரடி!

மேலும் அடுத்தகட்ட முழு ஊரடங்கு ஆகஸ்ட் 5, புதன் கிழமை மற்றும் ஆகஸ்ட் 16 மற்றும் 17-ம் தேதி அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் இறுதிவரை மூடியே இருக்கும் எனவும், நிலைமை சரியாகும் பட்சத்தில் வகுப்புகள் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories