Corona Virus

தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு : இன்று 82 பேர் பலி - தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3,741 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 60,794 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 660 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் மேலும் 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 5,309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து, செங்கல்பட்டில் 540 பேருக்கும், திருவள்ளூர், திருநெல்வேலியில் தலா 382 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 373 பேருக்கும், விருதுநகரில் 370 பேருக்கும், தூத்துக்குடியில் 316 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு : இன்று 82 பேர் பலி - தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3,741 பேர் பலி!

இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 883 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 57,493 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 82 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 54 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories