Corona Virus

இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று : 88 பேர் பலி - சென்னையில் 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,972 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், தேனியில் 283 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 61,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரத்து 866 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று : 88 பேர் பலி - சென்னையில் 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இன்று மட்டும் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 956 ஆக உள்ளது. தற்போது 57,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,659 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories