Corona Virus

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு... 77 பேர் பலி - 5,723 பேர் டிஸ்சார்ஜ்!

இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 77 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,723 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 54,896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில்  6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு... 77 பேர் பலி - 5,723  பேர் டிஸ்சார்ஜ்!

சென்னையில் இன்று ஒருநாளில் 1,138-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, இன்று திருவள்ளூரில் 474 பேருக்கும், செங்கல்பட்டில் 448 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 362 பேருக்கும், தூத்துக்குடியில் 349 பேருக்கும், விருதுநகரில் 338 பேருக்கும், கோவையில் 313 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories