Corona Virus

“கொரோனா கொல்கிறதோ இல்லையோ... பசியும், வறுமையும் கொன்றுவிடும்” - வீட்டு வேலை செய்வோர் வேதனை!

கொரோனா நோய்த்தொற்றின் அச்சத்தாலும், ஊரடங்கு விதிமுறைகளின் காரணமாகவும் வீட்டுப் பணியாளர்களில் பெரும்பகுதியினர் அவர்களின் பணியிடங்களுக்கு செல்லமுடியாமல் முடங்கிபோயினர்.

“கொரோனா கொல்கிறதோ இல்லையோ... பசியும், வறுமையும் கொன்றுவிடும்” - வீட்டு வேலை செய்வோர் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுநோய் அபாயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இவற்றோடு சேர்ந்துகொண்ட அரசின் அக்கறையின்மையால் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகளை சிக்கல்களை வெவ்வேறு சமூக- அரசியல், பொருளாதார வடிவங்களில் காணமுடிகிறது.

இந்தப் பொருளாதார நெருக்கடியால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது அமைப்புசாரா தொழிலாளர் அல்லது பாதுகாப்பற்ற தொழிலாளர் வர்க்கத்தில் வரும் வீட்டுப் பணி செய்யும் தொழிலாளர்கள்தான். இத்தகைய தொழிலாளர்கள் மீது சுரண்டல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நிகழ்த்தப்படுவது அறிந்த ஒன்றே.

அதிகார வர்க்கத்தினருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இடையேயான இரு மனம் சார்ந்த உளவியல் பிரச்சினைகள் நீண்ட நெடுநாட்களாக இருந்துகொண்டே இருக்கின்றன. அது இந்த பேரிடர்க் காலத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையை அனுபவ பூர்வமாகவும் அவர்களின் பொருள் நிலையில் இருந்தும் பார்க்கும்போதும் எளிதாக விளங்கி கொள்ள முடியும். அவ்வாறு கடந்த ஏழெட்டு வாரங்களாக (ஊரடங்கு ஆரம்பத்திலிருந்து தளர்வு அறிவிக்கப்படும் வரை) ஓரியண்டல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையினரால் நிகழ்த்தப்பட்ட மினி எத்தனோ- கிராபிக் ஆய்வு அவர்களின் இன்றைய உண்மை நிலையைப் பேசுகிறது.

இந்த ஆய்வு போபால், சண்டிகர், ஜான்சி போன்ற நகரங்களில் வீட்டுப்பணி செய்யும் 12 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்படி, கொரோனா நோய்த்தொற்றின் அச்சத்தாலும், ஊரடங்கு விதிமுறைகளின் காரணமாகவும் வீட்டுப் பணியாளர்களில் பெரும்பகுதியினர் அவர்களின் பணியிடங்களுக்கு செல்லமுடியாமல் முடங்கிபோயினர். அவர்களின் அன்றாட வருவாய் என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டது.

அதனால் அவர்களின் தினசரி நுகர்வு என்பது மிகுந்த பாதிப்புக்குள்ளானது. எடுத்துக்காட்டாக பால் மற்றும் காய்கறிகள் ஆடம்பரமான ஒன்றாக இக்காலகட்டத்தில் காட்சியளிக்கிறது. கணவன்மார்கள் வேலைக்குச் செல்லமுடியாத சூழலில், ஒற்றை வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த வீட்டு பணியாளர்கள் சிலர் வலியவரிடம் கடன் பெறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

அரசின் உதவிகளை பெறுவதிலும் பல சிக்கல்கள் அவர்கள் முன் நின்றன. அதில் முக்கியமாக அடிமட்டத்திலுள்ள நிர்வாக முறைகேடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பின் அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் எட்டாக்கனியானது.

“கொரோனா கொல்கிறதோ இல்லையோ... பசியும், வறுமையும் கொன்றுவிடும்” - வீட்டு வேலை செய்வோர் வேதனை!

இது ஒருபுறமிருக்க வெளிப்புற காரணிகளால் முடக்கப்பட்ட இந்த பணியாளர்கள் குடும்ப வன்முறையால் மேலும் பாதிப்புக்குள்ளானார்கள். வருவாயற்ற இச்சூழலில் அவர்களது கணவன்மார்கள் தேவையற்ற செலவினங்களில் அவர்களை இழுத்துவிட்டார்கள் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மேற்கத்திய நாடுகளின் அரசுகள் இந்த ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்கள் பொது சுகாதார நெருக்கடியால் சந்தித்த - சந்திக்கும் பிரச்சினைகளை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்கான கடனுதவியை வழங்கவும் முன்வந்துள்ளனர்.

மறுபுறம், இந்தியாவோ இவர்களுக்கான ஆதரவுக்கரத்தை நீட்டுவதற்கே முன்வரவில்லை, எந்தவொரு அடிப்படை சமூக பாதுகாப்பும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். மேன்மேலும் கொரோனா தீவிரமடைந்து கொண்டே செல்வதால் அவர்களின் நிலை இன்னும் மோசமடையலாம், அவர்களை இன்னும் வீரியமனதொரு வறுமைக்குள் தள்ளலாம். கோவிட்-19 கொல்லுகிறதோ, இல்லையோ வறுமையும், பசியும், கடனும் அவர்களை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories