Corona Virus

உலக நாடுகளின் பாதிப்பை மிஞ்சும் தமிழகம்: சென்னையில் 1,155.. பிற மாவட்டங்களில் 5,756.. மேலும் 85 பேர் பலி!

தமிழகத்தில் மேலும் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸுக்கு தமிழத்தில் மேலும் 6,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 62 ஆயிரத்து 305 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்திலேயே இருந்த ஆறாயிரத்து 911 பேருக்கும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 75 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு 94,695 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 501, திருவள்ளூரில் 480, விருதுநகரில் 385, ராணிப்பேட்டையில் 367, காஞ்சியில் 363 பேருக்கும், தூத்துக்குடி 248, கோவையில் 220, தேனியில் 217, குமரியில் 215, மதுரையில் 209, விழுப்புரத்தில் 208, திண்டுக்கல்லில் 203, வேலூரில் 196, நெல்லையில் 186, திருவண்ணாமலையில் 176, கடலூரில் 165, சேலத்தில் 162 என அதிகபட்சமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நீள்கிறது.

உலக நாடுகளின் பாதிப்பை மிஞ்சும் தமிழகம்: சென்னையில் 1,155.. பிற மாவட்டங்களில் 5,756.. மேலும் 85 பேர் பலி!
உலக நாடுகளின் பாதிப்பை மிஞ்சும் தமிழகம்: சென்னையில் 1,155.. பிற மாவட்டங்களில் 5,756.. மேலும் 85 பேர் பலி!

ஆகவே சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டுமே 5 ஆயிரத்து 756 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் போன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே தற்போது 53 ஆயிரத்து 703 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், அவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்படும் அனைவருமே கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனரா என்பதை அரசு தரப்பில் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையோ விளக்கமோ கொடுக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories