Corona Virus

ஜெர்மனியை மிஞ்சியது தமிழகம் : புதிதாக 6,988 பேருக்கு கொரோனா.. 89 பேர் பலி - ஹாட்ஸ்பாட் ஆகும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸுக்கு தமிழத்தில் மேலும் 6,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 61 ஆயிரத்து 729 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்திலேயே இருந்த ஆறாயிரத்து 926 பேருக்கும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 62 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 6,737 ஆக அதிகரித்துள்ளது. இது உலகளவில் 18வது இடத்தில் உள்ள நாடான ஜெர்மனியின் (2,05,968) கொரோனா பாதிப்பை விட அதிகமாகும்.

ஜெர்மனியை மிஞ்சியது தமிழகம் : புதிதாக 6,988 பேருக்கு கொரோனா.. 89 பேர் பலி - ஹாட்ஸ்பாட் ஆகும் மாவட்டங்கள்!

இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு 93,537 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 449, காஞ்சியில் 442, திருவள்ளூரில் 385, விருதுநகரில் 376, தூத்துக்குடி 316, மதுரை 301, கோவையில் 270, குமரியில் 269, ராணிப்பேட்டையில் 243, தேனியில் 229, வேலூரில் 212, நெல்லையில் 210, திருச்சியில் 199 என அதிகபட்சமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நீள்கிறது.

ஆகவே சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டுமே 5 ஆயிரத்து 659 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியை மிஞ்சியது தமிழகம் : புதிதாக 6,988 பேருக்கு கொரோனா.. 89 பேர் பலி - ஹாட்ஸ்பாட் ஆகும் மாவட்டங்கள்!

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் போன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே தற்போது 52 ஆயிரத்து 273 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், அவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்படும் அனைவருமே கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனரா என்பதை அரசு தரப்பில் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையோ விளக்கமோ கொடுக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories