Corona Virus

#Covid19 நாள்தோறும் புதிய உச்சம் தொடும் கொரோனா பரவல் : இன்று 6,785 பேருக்கு தொற்று... 88 பேர் பலி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,729 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,729 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 56 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனால் இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 019 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று 1,299 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 423 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 419 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

#Covid19 நாள்தோறும் புதிய உச்சம் தொடும் கொரோனா பரவல் : இன்று 6,785 பேருக்கு தொற்று... 88 பேர் பலி!

இன்று மட்டும் 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 53,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories