Corona Virus

“கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரண நிதி” - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியின் பதினான்காவது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் இருபதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்பு கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,421 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 9.16 கோடி வந்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories