Corona Virus

உச்சம் தொட்ட கொரோனா பரவல் : இன்று மட்டும் 6,472 பேருக்கு தொற்று... 88 பேர் பலி! #Corona

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,423 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 49 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 1336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 480 பேருக்கும், திருவள்ளூரில் 416 பேருக்கும், தூத்துக்குடியில் 415 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட கொரோனா பரவல் : இன்று மட்டும் 6,472 பேருக்கு தொற்று... 88 பேர் பலி! #Corona

கொரோனா குணமடைந்து இன்று மட்டும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 52,939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories