Corona Virus

“டெல்லியில் 23% கொரோனா தொற்று சமூகப் பரவல்தான்” : ஆன்ட்டிபாடி சோதனை மூலம் அம்பலம்!

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க தீவிரமான நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் 23.48 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சமூக பரவல் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாகத் தொடர வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் 21,387 பேரிடம் கொரோனா சமூகப் பரவல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக எலிசா ஆன்ட்டிபாடி சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

“டெல்லியில் 23% கொரோனா தொற்று சமூகப் பரவல்தான்” : ஆன்ட்டிபாடி சோதனை மூலம் அம்பலம்!

சராசரியாக 23.48% பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோருக்கு எந்த நோய் அறிகுறியும் இதுவரை இல்லை. மேலும், அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் இந்த அளவுக்குள் கட்டுக்குள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, மேலும் பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போதைய நிலையிலேயே கண்டிப்புடன் தொடரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

போதுமக்கள் மாஸ்க் அணிவது, நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிற்பது உள்ளிட்ட சமுக இடைவெளியை தொடர்ந்து கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories