தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 4,930 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 65 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 52,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 19 லட்சத்து 84 ஆயிரத்து 579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் இன்று 1298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 454 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 354 பேரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 3,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 70 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 51,348 பேர் சிகிச்சையில் உள்ளனர்.