தமிழகத்தில் இன்று புதிதாக 4979 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதாகும்.
புதிதாக 51 ஆயிரத்து 640 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4979 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதில், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 77 பேர் இல்லாமல் தமிழகத்திலேயே இருந்த 4902 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல் சென்னையிலேயே அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று 1254 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து திருவள்ளூரில் 405, செங்கல்பட்டில் 306, விருதுநகரில் 265, காஞ்சிபுரத்தில் 220, மதுரையில் 206 என பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் 100க்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
நான்காயிரத்து 59 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரையில் 1.17 லட்சத்து 915 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 294 ஆக உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதில் எவ்வித துணை நோயும் இல்லாமல் 3 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 27 , செங்கல்பட்டு, மதுரையில் தலா 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.