Corona Virus

இன்று ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலி : தமிழகத்தில் மேலும் 4,538 பேர் பாதிப்பு! #CoronaUpdates

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் கொரோனா பாதித்த 79 பேர் உயிரிழந்தனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 4,463 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 75 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 48,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 18 லட்சத்து 31 ஆயிரத்து 304 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று மட்டும் சென்னையில் 1,243 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், மதுரையில் 263 பேருக்கும், திருவள்ளூரில் 220 பேருக்கும், விருதுநகரில் 196 பேருக்கும், தூத்துக்குடியில் 189 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலி : தமிழகத்தில் மேலும் 4,538 பேர் பாதிப்பு! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் 3,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 47,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் கொரோனா பாதித்த 79 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories