Corona Virus

இன்று ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்... பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை காணாத உயர்வு! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது; 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 4,483 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 66 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 45,888 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 17 லட்சத்து 82 ஆயிரத்து 635 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் 1,157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 526 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்... பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை காணாத உயர்வு! #CoronaUpdates

இதுவரை இல்லாத அளவில் இன்று மட்டும் 5,106 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 46,714 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories