Corona Virus

இன்று ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது! #Corona

தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 68 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 41,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 17 லட்சத்து 36 ஆயிரத்து 747 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் இன்று1,291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.

தென்மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மதுரையில் இன்று ஒரே நாளில் 341 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 268 பேருக்கும் விருதுநகரில் 175 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது! #Corona

இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்றுவந்த 5,000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 47,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories