Corona Virus

“1,000 பேரிடம் கொரோனா தடுப்பு மருந்து சோதனை” - ஐ.சி.எம்.ஆர் தகவல்!

சமூகப் பரவல் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில் மனிதர்களிடையே சோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறுகையில், “இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. எலி உட்பட விலங்குகளுக்கு செலுத்தி இந்த மருந்துகளின் தன்மை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து இரண்டு நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வினை 1,000 பேரிடம் நடத்தி வருகின்றனர். தடுப்பூசி ஆய்வினை விரைந்து முடிக்கும் விதமாக 24 மணி நேரமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

WHO நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேரில் 140 பேரிடம் சோதனை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளது. 22 மாநிலங்களில் அதைவிட அதிக எண்ணிக்கையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1,206 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

சமூகப் பரவல் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். ஒருவரிடமிருந்து குறைந்த அளவு தூரத்தில் காற்று மூலம் நுண்ணிய துளிகளால் பரவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான் போதிய இடைவெளி தேவை, மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

“1,000 பேரிடம் கொரோனா தடுப்பு மருந்து சோதனை” - ஐ.சி.எம்.ஆர் தகவல்!

சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் பேசுகையில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் பத்து லட்சம் பேருக்கு 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17.2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 50% பாதிப்பு தமிழகத்திலும், மகாராஷ்டிராவிலும் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories