Corona Virus

இதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு : இன்று 4,526 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் பலி!

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,743 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 67 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,467 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 59 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் இன்று1,078 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,662 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,448 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு : இன்று 4,526 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் பலி!

தென்மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மதுரையில் இன்று ஒரே நாளில் 450 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 328 பேருக்கும், திண்டுக்கல்லில் 157 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,099 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்றுவந்த 4,743 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories