Corona Virus

மதுரையில் இன்று 464 பேருக்கு கொரோனா தொற்று.. தமிழகம் முழுக்க 4,328 பேர் பாதிப்பு.. 66 பேர் பலி! #Corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42, 978 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில் 4,270 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 58 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

இன்று மட்டும் 44,560 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 16,54,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரையில் 464 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று 464 பேருக்கு கொரோனா தொற்று.. தமிழகம் முழுக்க 4,328 பேர் பாதிப்பு.. 66 பேர் பலி!  #Corona

இன்று மட்டும் தமிழகத்தில் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 48,196 பேர் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories