Corona Virus

Testing, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO !

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் தாராவியை உதாரணம் காட்டியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆறு வாரங்களில் இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் இந்தியாவின் தாராவி உள்ளிட்ட பகுதிகளை உதாரணமாகக் கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.

மும்பையின் தாராவியில் ஏப்ரல் 1ம் தேதியன்று முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6,00,000-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதி என்பதால், தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது சிக்கலான காரியம். கொரோனா பரவலின் வேகம் மிகக் குறைவான காலத்திலேயே பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உண்டு.

மக்களும், அரசும் அச்சமடைந்தது போலவே மே மாத இறுதிக்குள் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பும் 50-ஐ கடந்தது. ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனை, சிகிச்சை ஆகிய நடவடிக்கைகளால் தற்போது ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,359 என்ற நிலையில், அதில் 1,952 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 166 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடு முயற்சிகளில் தாராவி எடுத்த முயற்சிகளுக்கும், மக்களின் ஒத்துழைப்புக்கும் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Testing, Tracking, Treating : “தீவிர கொரோனா பரவலிலிருந்து மீண்ட தாராவி” - உதாரணம் காட்டிய WHO !

இதுகுறித்து அவர் காணொளிக் காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா பரவல் தீவிரமடைந்தாலும் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்பதற்கு உலகளவில் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.

அனைவரையும் பரிசோதிப்பது, தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், தொற்று பரவும் சங்கிலி உடைந்து வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளன. மும்பையில் இருக்கும் தாராவி நெரிசலான பகுதியாக இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories