Corona Virus

"சொரியாசிஸ் நோய்க்கான மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாம்” - DGCI அறிவுறுத்தல்!

சொரியாசிஸை குணப்படுத்தப் பயன்படும் இடோலிஸுமாப் மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘சொரியாசிஸ்’ தோல் நோயைக் குணப்படுத்தப் பயன்படும் இடோலிஸுமாப் மருந்தை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை எட்டியுள்ளது.

கொரோனாவுக்கு என பிரத்யேக தடுப்பூசியோ, மருந்துகளோ பயன்பாட்டுக்கு வராத நிலையில், அவ்வப்போது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் சில மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைத்து வருகிறது.

கொரோனா தொற்றாளர்களுக்கு பயன்படுத்த ஏற்கெனவே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், டெக்ஸாமெத்தசோன், மெதில்பிரட்னிசோலன் மருந்துகளை இந்திய மருத்து கட்டுப்பாட்டு கழகம் பரிந்துரை செய்த நிலையில் தற்போது இடோலிஸுமாப் மருந்தையும் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகத்தின் தலைவர் மருத்துவர் வி.ஜி.சோமானி வெளியிட்ட அறிவிப்பில் “கொரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் சோரியாசிஸ் நோய்க்கு வழங்கப்படும் இடோலிஸுமாப் மருந்தை வழங்க பரிந்துரைத்துள்ளோம்.

"சொரியாசிஸ் நோய்க்கான மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாம்” - DGCI அறிவுறுத்தல்!

தீவிரமான மற்றும் மிதமான சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அவசர நேரத்தில் மட்டுமே மருத்துவர்கள் இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளில் பலருக்கும் இந்த மருந்தை செலுத்தி பரிசோதித்தபின், பல்வேறு மருத்துவ நிபுணர்களுடனான தீவிர ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயோகான் நிறுவனம் தயாரிக்கும் இடோலிஸுமாப் மருந்துகள் சந்தையில் ‘அல்ஸுமாப்’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. இது நீண்டகாலமாகவே சோரியாசிஸ் தோல் நோய் சிகிச்சையில் பயன்படுவதாகும்.

banner

Related Stories

Related Stories