Corona Virus

இன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 3,907 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 58 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 346 பேருக்கும், மதுரையில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 237 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 69 பேர் பலி... தமிழகம் முழுக்க தீவிரமடையும் கொரோனா தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் 37,825 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 15 லட்சத்து 66 ஆயிரத்து 917 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று 3,591 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 915 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 46,410 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories