Corona Virus

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1205 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உட்பட 13 மாவட்டங்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி!

இன்று மட்டும் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்தனர். அதில் 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 14,64,281 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories