Corona Virus

இன்று மட்டும் 4,231 பேருக்கு தொற்று; 65 பேர் பலி - தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேகமெடுக்கும் கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தமிழகத்தில் இன்று மட்டும் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக உள்ளது.தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,086 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 145 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் . இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்து திருவள்ளூரில் 364 பேருக்கும், விருதுநகரில் 289 பேருக்கும், மதுரையில் 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் 4,231 பேருக்கு தொற்று; 65 பேர் பலி - தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேகமெடுக்கும் கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 42,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 783 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக உள்ளது. தற்போது 46,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories