Corona Virus

“இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 53% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” - மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 53% பேர். 75 வயதுக்கு மேற்பட்டோர் 14%.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 7 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பரவல் வேகம் நாள்தோறும் அதிகரித்து வருவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் தெரிவித்ததாவது :

“மக்கள்தொகையை கணக்கில் கொள்ளும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மிகக் குறைவாக உள்ளது. உலகளவில் அதிகமாக பாதிக்கப்பட்ட 5 நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 10 லட்சம் நபர்களுக்கு தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கையானது (538) மிகக் குறைவாகவும் அதேபோன்று 10 லட்சம் நபர்களுக்கு மரணம் ஏற்படும் எண்ணிக்கை (15) மிகக் குறைவாகவும் உள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 8 மாநிலங்களில் (மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்) மட்டுமே சுமார் 90 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 45 - 59 வயதுக்குள் 32% உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 60 முதல் 74 வயதுக்குள் உள்ளாவர்களில் 39% உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 75 வயதுக்கு மேல் பாதிக்கப்பட்டோரில் 14% உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

“இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 53% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” - மத்திய சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பாரத் பயோ டெக் மற்றும் கேடிலா தடுப்பூசிகள் விலங்குகள் மீதான ஆய்வை முடித்து மனிதர்களிடம் ஆய்வினைத் தொடங்கியுள்ளது.

ஆய்வுகளை விரைவு படுத்தும் விதமாகவே ஆகஸ்ட் 15 முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்யப்படாது.”

banner

Related Stories

Related Stories